Pages

Saturday, February 11, 2012

பாக்கிஸ்தான்-இலங்கை உடன்படிக்கை: பொருளாதார - பாதுகாப்பு மேம்படுத்த பாக்கிஸ்தான் இணங்கம்!

Saturday, February 11, 2012
இலங்கை::இலங்கையுடன், வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கும் பாக்கிஸ்தான் இணங்கியுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாக்கிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதிக்கும், பாக்கிஸ்தான் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், துறைகள் தொடர்பாகவும், பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆலோசனைகளை முன்வைத்ததாக டோன் எனப்படும் பாக்கிஸ்தான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாக்கிஸ்தானுக்கிடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை எதிர்வரும் 3 வருடங்களில் 2 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க இதன் போது திட்டமிடப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான அந்நிய செலாவணியை நேரடியாக பறிமாற்றிக் கொள்வதற்கும், நேரடியான கப்பல் சேவையை ஈடுபடுத்துவதற்கும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை சக்திமிக்கதாக்கி தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி சர்தாரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளதாகவும், டோன் நாளதழ் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பாக்கி;ஸ்தானின் டேய்லி ரைம்ஸ் நாளிதழ் தமது செய்திக் குறிப்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், வருகையை பாக்கிஸ்தான் அரசாங்கம் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பாக்கிஸ்தான் விஜயத்தின் போது, பௌத்த சம்பிரதாயபூர்வ இடங்களுக்கும் சென்றுள்ளார்.

பாக்கிஸ்தான்-இலங்கை உடன்படிக்கை!

பாக்கிஸ்தானுக்கான இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துகலந்துரையாடியுள்ளார்.

இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதற்கு முன்பதாக பாக்கிஸ்தான் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு பாக்கிஸ்தான் ராணுவம் அணிவகுப்பு மரியாதை அணிவகுப்பை நிகழ்த்தியது.

கடந்த 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செலுத்திய பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீனி உற்பத்தி, மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பாக்கிஸ்தான் பயன்படுத்தும் தொழினுட்பங்களை வழங்க முடியும் என பாக்கிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சில உடன்படிக்கைகளும் இருதரப்பிற்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment