Pages

Wednesday, February 8, 2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதம்?

Wednesday,February,08,2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் பின்கதவு வழியாக நேரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இன்று அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நாளாகும். சிறை அதிகாரிகள் அவரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். நான் அறிந்த வரையில் பொன்சேகா ஒரு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கு மேல் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது' எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி நகருகின்றனர். சிறைச்சாலை வளாகத்தை நோக்கி நகருவதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருபகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உண்ணாவிரதத்தை பொன்சேகா கைவிட்டார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த உண்ணாவிரததத்தை கைவிட்டுள்ளதாக ஜ.தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். சரத் பொன்சேகா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment