Thursday, February 2, 2012

யுவதிகளை மணம் முடிப்பதாகக் கூறி ஏமாற்றிய நபர் கைது!

Thursday, February 02, 2012
இலங்கை::மணம் முடிப்பதாகக் கூறி யுவதிகளை ஏமாற்றி சுமார் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒருவர் கேகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி என்ற போர்வையில் சந்தேக நபர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 35 யுவதிகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment