Tuesday, February 7, 2012

ஹிலாரி இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளார் - திவயின!

Tuesday, February 07, 2012
இலங்கை::வன்னி இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடைய சில சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குமாறு அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி வெலர் பபுலர் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கிளின்டன், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறும் கோரியுள்ளார்.

ஹிலாரி கிளின்டனின் இந்த கடிதமானது நாட்டின் தேசிய பாதுகாப்பில் மேற்கொண்டுள்ள கடுமையான தலையீடாகும் என சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் எந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை எனவும் கிளின்டன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் மனித உரிமை தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி செயலாளர் ஆகியோர் எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். அதேவேளை ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், அமெரிக்க இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக நெதர்லாந்து வானொலி அண்மையில் வெளியிட்ட செய்தியொன்றில் தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment