Tuesday, February 07, 2012இலங்கை::வட பிராந்தியத்தில் நிலக்கண்ணி அகற்றும் பணிகள் எதிர்பார்த்த காலத்தை விட மேலும் அதிகமாகலாம் என தெரிவி;க்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் உள்ன நிலக்கண்ணி வெடிகளை முற்றாக அகற்றவும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மாசினை அகற்றற மேலதிகமாக 10 வருட காலங்கள் எடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வளங்கள் மற்றும் பயிற்றப்பட்ட ஆளனி பற்றாக்குறை மற்றும் கடினமான சூழ்நிலை காரணமாகவே திட்டமிட்டப்படி இந்த அகழ்வு பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தேசிய கண்ணி வெடி அகற்றும் மத்திய நிலையத்தின் தரவின் படி 2011 ஆம் ஆண்டு இறுதி வரை 126 சதுர கிலோமீற்றர் காணிகள் கண்ணி வெடி அகற்றப்படாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண ஆகிய மாவட்டங்களிலே இருப்பதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி அமைப்பின் கண்ணி வெடி அகற்றும் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment