Pages

Thursday, February 2, 2012

திவாகரன் வெளிநாடு தப்பி ஓட்டம்? : தனிப்படை தீவிர விசாரணை!

Thursday, February 02, 2012
திருவாரூர்::திவாகரன் வெளிநாட்டுக்கு தப்பியோடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மன்னார்குடியில் ஒரு பெண்ணின் வீட்டை இடித்தது தொடர்பான வழக்கில் சசிகலா தம்பி திவாகரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். தலைமறைவாக உள்ள அவர், முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. திவாகரன் இருப்பிடம் குறித்து அவரது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் போலீசார் விசாரித்தனர். இதுவரை எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறிவருகின்றனர். இந்நிலையில், திவாகரனின் மனைவி ஹேமலதாவை நேற்று நீடாமங்கலம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தேவைப்படும்போது விசாரணைக்கு வரும்படி அவருக்கு நிபந்தனை விதித்து அனுப்பி வைத்தனர். சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் வீட்டை ஒரு பெண் எஸ்ஐ, 4 பெண் போலீஸ் மற்றும் ஒரு போலீஸ்காரர் கண்காணித்து வருகின்றனர்.

திவாகரன் மீது கடந்த மாதம் 21-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், 25-ம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகே அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இடைப்பட்ட 4 நாட்களில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டில் அவரது மகன் ஜெயஆனந்த் படித்து வருவதாலும், அவரது கல்லூரியில் படித்த ஏராளமான மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் வேலை செய்துவருவதாலும் அவர்கள் உதவியால் வெளிநாடு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றாரா என தனிப்படை விசாரித்து வருகிறது.

No comments:

Post a Comment