Friday, February 10, 2012சென்னை::சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா தம்பதியரின் மகள் சகிலா, திருச்சி கே.ஏ.எஸ்.ராம்தாஸ், ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு திருமணம் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நேற்று காலை நடந்தது. மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் எம்எல்ஏ, அவரது மனைவி ராதிகா ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர். இராவணன் மசாலா குழுமத்தின் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு நாடார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் எச்.ஸ்டீபன், வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கே.எஸ்.மூர்த்தி, பொதுச் செயலாளர் விவேக் சிவசாமி, சமக மாநில அமைப்பு செயலாளர் பாவூர் சத்திரம் ஆர்.கே.காளிதாஸ், துறைமுகம் பகுதி வடசென்னை மாவட்ட நாடார் பேரவை தலைவர் கே.மகராஜன், கராத்தே ச.ரவி, மற்றும் சமக நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், பல்வேறு கட்சியினர் மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்களை எர்ணாவூர் ஏ.நாராயணன், சென்னை டீலக்ஸ் ஓட்டல் இயக்குனர் என்.கார்த்திக் வரவேற்றனர்.
No comments:
Post a Comment