Pages

Friday, February 3, 2012

யாழ் மணிக்கூட்டு கோபுர வீதியில் புதிதாக நவீன முறையில் அமையப் பெறவுள்ள யாழ்கோவிங் ஹோட்டலுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு!

Friday, February 03, 2012
இலங்கை::யாழ். ஹோட்டேல்ஸ் பிரைவட் லிமிட்டெட்டின் ஜெட்விங் யாழ் ஹோட்டலுக்கான அடிக்கல்லை இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் டி. எம் ஜயரட்ன வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

யாழ். நகரத்திலேயே 14 மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டடமாக இக் ஹோட்டல் அமையவுள்ளது.

இக் கட்டட நிர்மாணப்பணிகளுக்கு என 750 மில்லியன் ரூபாய்களை அரசு வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவு பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்ட போதிலும் தற்போது யுத்தம் முடிவுக்கு வந்து பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தொடர்ச்சியாக இவ்வாறான திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

இதன்மூலம் இப்பகுதி அபிவிருத்தியில் முன்னேற்றம் அடையும் அதேவேளை பொருளாதாரத்திலும் மேம்பாடடைய முடியுமென்றும் இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் இம்மாவட்டத்தில் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இவ்வாறான தொழில் நிறுவனங்களை அமைப்பதனூடாகவே அது சாத்தியமாகும் என்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது சிந்தனையாகும் என்றும் தெரிவித்தார்.

முன்பதாக ஹோட்டலுக்கான அடிக்கல்லினை பிரதமர் தி.மு. ஜயரட்ண நாட்டி வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

14 மாடிகளைக் கொண்டதாக அமையப்பெறவுள்ள இவ் ஹோட்டல் 75 கோடி ரூபா செலவில் 65 அறைகளைக் கொண்டதாக நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ண உரையாற்றும் போது இந்நாட்டில் இன மத மொழி என்ற பேதங்களில்லாமல் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே இந்த ஹோட்டலும் அமையப் பெறவுள்ளதாகவும் இவற்றினூடாக இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதனூடாக யாழ் மாவட்டம் பொருளாதாரத்தில் விரைவாக முன்னேற முடியும் என்றும் தெரிவித்தார்.

மதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment