Thursday, February 9, 2012

விமல் வீரவங்ச போன்றோர் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்-விக்ரமபாகு கருணாரத்ன!

Thursday, February 09, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்கள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் பிரதம செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவிக்கின்றார்.

இன்று முற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சரவை ஏற்றுக்கொண்ட ஆவணம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம்,பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அரசாங்கம் உறுதி வழங்கிய, சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட ஆவணம், சுதந்திர தினத்தின் போது ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவதாக ஏற்றுக்கொண்ட ஆவணமொன்றை எதிர்ப்பவர்கள் அமைச்சரவையில் உள்ளனர் என்றால் அது முழுமையான அமைச்சரவை சம்பிரதாயத்துக்கு எதிரானதாகும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அந்த அமைச்சர்களை உடனடியாக விரட்டியடிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டிய விக்ரமபாகு கருணாரத்ன சம்பிக்க மற்றும் விமல் வீரவங்ச போன்ற அமைச்சர்கள் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும், ஏனெனில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment