Thursday, February 2, 2012

வடக்கு காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் பாரிய குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது:பாரிய குண்டிலிருந்து உயிர் தப்பிய ஊழியர்கள்!

Thursday, February 02, 2012
இலங்கை::வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் பாரிய குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக நேற்று புதன்கிழமை மேடை அமைப்பதற்கு மண்வெட்டிய போது நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையிலேயே இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பலாலியிலுள்ள இராணுவ படைத் தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் பொறியியல் பிரிவினர் உடனடியாகக் குறிப்பி;ட்ட இடத்திற்கு விரைந்து குண்டை வெடிக்காத நிலையில் மிகவும் அவதானமாக மீட்டுள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்து பதினாறு வருடங்கள் கடக்கும் நிலையில் இக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தெய்வாதீனமாக இக்குண்டு வெடிக்காதமையினால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியரொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment