Saturday, February 11, 2012

தலவாக்கலை நகரில் போலி வைத்தியர் கைது!

Saturday, February 11, 2012
இலங்கை::தலவாக்கலை நகரில் மருத்துவ நிலையமொன்றை நடத்திவந்த போலி வைத்தியரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஆறு வருடகாலமாக குறித்த வைத்திய நிலையத்தினை அவர் நடத்திவந்துள்ளதாக லிந்துலை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்.ஜனத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் வழங்கிய மருந்துப் பொருட்களை உட்கொண்டதால் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக கிடைக்கப்பெற்ற சில முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது,குறித்த போலி வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 60 வயதான குறித்த சந்தேக நபர் தலவாக்கலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment