Monday, February 06, 2012இலங்கை::தூத்துக்குடி, கொழும்பு இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா , இலங்கை இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக தூத்துக்குடி , கொழும்பு இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 'ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 1,000 பேர் பயணம் செய்யக்கூடிய இதில் 200 பேர் மட்டுமே பயணம் செய்தனர். போதுமான வருமானம் இல்லாதது மற்றும் சட்ட சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை கப்பல் போக்குவரத்து துறை விருப்பம் தெரிவித்துள்ளது. புதிதாக இயக்கப்பட உள்ள கப்பல் 500 பேர் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இதுதொடர்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கு விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்குப் பிறகு வெற்றி பெற்ற நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என இலங்கை கப்பல் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment