Pages

Friday, February 10, 2012

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் டயஸ்போறா புலிகளெனவும் அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் தொடர்புள்ளதாக-அஸ்வர்!

Friday, February 10, 2012
இலங்கை::புலம்பெயர் நாடுகளில் செயற்படும் டயஸ்போறா புலிகளெனவும் அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் தொடர்புள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்வர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பெருந்தெருக்கள் மீதான சட்டமூலத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் 2009ம் ஆண்டுடன் அரசாங்கம் புலிகளை அழித்துவிட்டதாக கூறி அரசியல் செய்த நீங்கள் இப்போது கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சித்தால் அதற்கு தகுந்த பதில் தராமல் கூட்டமைப்பு புலிகள் கேட்டதையே கேட்கின்றது கூட்டமைப்புக்கு புலிகளுடன் தொடர்பு என மீண்டும் புலிகளை வைத்து அரசியல் செய்வது நீங்கள் தான் நாங்கள் இல்லை என கூறியபோது இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வர் எம்.பி. உங்களது தலைவர் சம்பந்தன் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று டயஸ்போறா புலிகளை சந்தித்து பேசியுள்ளார். அவருக்கு டயஸ்போறா புலிகளுடன் தொடர்புள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment