Saturday, February 4, 2012

அதிமுகவுடன் சேராமல் இருந்தால் தேமுதிக காணாமல் போயிருக்கும் : பன்னீர்செல்வம்!

திருவள்ளூர்::திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், மணவாளன் நகரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர செயலாளர்கள் சுதாகர், ரவிச்சந்திரன், கந்தசாமி, சந்திரசேகர், சீனிவாசன், பார்த்திபன், சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு தலைவர்கள் தட்சணாமூர்த்தி, ரவி, திருநாவுக்கரசு, அம்மு மாதவன், சாந்தி பிரியா, நகரமன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கர், வக்கீல்கள் ராம்குமார், வேல்முருகன் வரவேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக, நாளைய பிரதமரின் வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே சக்தியாக ஜெயலலிதா விளங்குகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகம். மத்திய அரசை கையேந்தும் நிலை ஏற்படாது. ஏனென்றால், இந்தியாவை ஆளப்போகிறவர் ஜெயலலிதாதான். மத்திய அரசு எதற்கும் லாயக்கற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. தேமுதிகவை கூட்டணி சேர்க்காமல் இருந்திருந்தால் இன்று அந்த கட்சி காணாமல் போயிருக்கும். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், மாநில இளைஞரணி இணை செயலாளர் சம்பத்குமார், எம்எல்ஏக்கள் மணிமாறன், பொன்.ராஜா, முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் எம்எல்ஏ திருத்தணி அரி, ஜெயபால், பரிமேல்அழகர், கோவி.நாராயணமூர்த்தி, ஏழுமலை, வலசை சந்திரசேகர், பஷீர் ராஜா, ராமர், ராதாகிருஷ்ணன் மோகன், முத்துகொண்டாபுரம் ரமேஷ், நேசன், விஜயதேவி பாபு, பாசுரான், லோகநாதன், பூபாலன், இன்பநாதன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நரேஷ்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment