Pages

Tuesday, February 7, 2012

ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியாவில் ஹோட்டல் பெல்கனியிலிருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளார்!

Tuesday, February 07, 2012
இலங்கை::ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஹோட்டல் பெல்கனியிலிருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் பெல்கனியிலிருந்துகீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கால்களில்சத்திரசிகி;ச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மெல்பர்ன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டல் அறை மூடப்படடிருந்த காரணத்தினால் பெல்கனி வழியாக அறைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் விபத்துக்குள்ளான விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தமது புதல்வர் சுகவீனமுற்றிருப்பதாகவும் அவரை பார்வையிடுவதற்காக அமைச்சர் அவுஸ்திரேலியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment