Sunday, February 12, 2012ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் குருக்கள் கணபதிராமன் மந்திரம் ஓத, ஸ்ரீராம் குருக்கள் காலை 10 மணிக்கு சாமி சன்னதியில் கொடியேற்றினார். வரும் 20ம் தேதி காலை சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடக்க உள்ளது. அன்று இரவு சுவாமி அம்பாள் மின் அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கும். 21ம் தேதி மாசி மகா சிவராத்திரி அமாவாசையை முன்னிட்டு, அன்று பகல் 1 மணிக்கு சுவாமி, அம்பாள் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடக்கும். 23ம் தேதி வரை விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து ஸ்படிக லிங்க பூஜை நடக்கும். சுவாமி, அம்பாள் கந்தமானபர்வதம் செல்லும் நிகழ்ச்சி நடக்கும். இதைத்தொடர்ந்து நடை சாத்தப்படும். அன்று கோயிலில் தீர்த்தமாட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இரவு சுவாமி, அம்பாள் கோயிலுக்கு வந்த உடன் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடக்கும்.
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
ReplyDeleteநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.
இங்கே சொடுக்கவும்
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
Reply