Thursday, February 09, 2012சென்னை::இலங்கை-இந்திய நட்புறவைப் பாதுகாப்பது என்பது பாரிய சவாலாகிவிட்டது. அரசியல் இலாபங்கள் கருதி இரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்படுகின்றன என்று தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
யுத்தத்திலிருந்து விடுபட்டு இலங்கை அபிவிருத்தி இலக்குகளை நோக்கி மிக விரைவாகப் பயணிக்கிறது. இதற்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கைக்கு நட்புறவுடன் உதவி செய்ய வேண்டும். சுயபோக்குடையவர்களுடன் இணைந்து இடையூறுகளைச் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே துணைத்தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இந்திய மக்களிடமோ, அரசாங்கங்களிடமோ எவ்விதமான மோதல்களும் இல்லை. ஆனால் மோதல்களை ஏற்படுத்த அரசியல் இலாப நோக்குடையவர்கள் செயற்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment