Thursday, February 09, 2012இலங்கை::இந்தியப் பிரஜைகள் நால்வர் வாகரைப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் வாகரைப் பிரதேசத்தில் தொழில்புரிந்து வந்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தப் பிரஜைகளின் மூவர் வாகரை சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மற்றைய சந்தேகநபருக்கு 50ஆயிரம் ரூபா அபராதத்துடன் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment