Pages

Thursday, February 2, 2012

உரிய சம்பளம் வழங்கப்படவில்லையென நாடு திரும்பினர் பணிப்பெண்கள்!

Thursday, February 02, 2012
இலங்கை::மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதி நிலைக்குள்ளான மேலும் ஒரு தொகுதி பணிப்பெண்கள் இன்று காலை நாடு திரும்பினர்.

விமானம் மூலம் சுமார் 70 பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு வருகை தந்த பணிப்பெண்களில் அதிகமானோர் குவைத் மற்றும் சவூதி அரேபிய நாடுகளில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினால் உறுதியளிக்கப்பட்டவாறு தாம் நடத்தப்படவில்லை என்றும் பணிப்பெண்கள் கவலை தெரிவித்தனர்.

நாட்டிற்குத் திரும்பியவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment