Friday, February 03, 2012சென்னை:: மீனம்பாக்கத்தில் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், ஆசனவாயில் மறைத்து தங்கங்களை கொண்ட வந்த 6 பேர் சிக்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து நேற்றிரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினரும், சங்கத்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகப்படும் படி வந்த 6 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் உடல் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் ஒன்றும் சிக்கவில்லை.
மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், 6 பேருக்கும் ஸ்கேன் சோதனை நடத்தினர். அப்போது, ஒன்றும் சிக்கவில்லை. மேலும் மேலும் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், 6 பேரையும் பல்லாவரத்தில் உள்ள ஒரு எக்ஸ்ரே மையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, 6 பேரின் வயிற்றிலும் தங்கக் கட்டிகள் இருந்ததை எக்ஸ்ரே காட்டி கொடுத்துவிட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சென்னையில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்றது தெரியவந்தது.
இலங்கையில் இருந்து ஆசனவாய் மூலம் தங்கக்கட்டிகளை பாலிதீன் பையில் வைத்து வயிற்றில் வைத்திருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கைது செய்யப்பட்ட முகமது அனிபா, முஸ்தா, லியாகத் அலிகான், அகமத் உள்ளிட்ட 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment