Pages

Saturday, February 11, 2012

ரொபட் ஓ பிளக் மாலைத்தீவு செல்கிறார்!

Saturday, February 11, 2012
இலங்கை::இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவிற்கான தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் குறித்த உதவி செயலாளர் ரொபேட் பிளேக், அதற்கு முன்னர் மாலைதீவு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரொபட் ஓ பிளக்குடன் இலங்கைக்கு வருகை தரவிருந்து அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள்துறை செயலாளர் மாரியோ ஒட்டீரோ நேரடியாக இலங்கை வருகை தரவுள்ளர்.

இதனிடையே, ரொபட் ஓ பிளக் மாலைத்தீவுக்கு சென்று அங்கிருந்து இலங்கை வந்து, மாரியோ ஒட்டீரோ குழுவுடன் இணைந்து கொள்வார் என்று ஏசியன் ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மாலைதீவு செல்லும் ரொபட் ஓ பிளக் அங்கு நடத்தவுள்ள பேச்சுவார்தைகளின் போது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஆலயத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாலைதீவில் கூட்டு அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்க அமெரிக்க நிர்வாகம் விரும்புவதாக ஏசியன் ட்ரியுபின் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment