Pages

Thursday, February 9, 2012

இலங்கையில் துப்பாக்கி தயாரிக்க செம்மரக்கட்டைகள் கடத்தலா?: கியூ பிரிவு விசாரணை!

Thursday, February 09, 2012
ராமநாதபுரம்::இலங்கையில் துப்பாக்கி தயாரிப்பதற்காக விலை உயர்ந்த மரங்கள் கடத்தப்பட இருந்ததா? என, கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 700 கிலோ செம்மரக்கட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த மூன்று பேரை, கியூ பிரிவு போலீசார் பிடித்தனர். விசாரணையில், இலங்கையில் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இலங்கையில் துப்பாக்கி தயாரிப்பதற்காக பயன்படுத்துகின்றனரா அல்லது அலங்காரப் பொருட்கள், பர்னிச்சர்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றனரா என, விசாரித்து வருகிறோம். மேலும், இவற்றை சென்னையில் சப்ளை செய்பவர்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது' என்றார்.

No comments:

Post a Comment