Saturday, February 04, 2012இலங்கை::கொழும்பு ஹல்ஸ்டொப்பில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடம் வேறு இடத்துக்கு மாற்றப்படமாட்டாது என்று தம்மை சந்தித்த சட்டத்தரணிகளிடம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
ஹல்ஸ்டொப்பில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்தை விற்பனை செய்யப்போவதாகவும் அங்கிருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் வேறு இடத்தி;ற்கு மாற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை ஆட்சேபித்து சட்டத்தரணிகள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இதேவேளை, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சட்டத்தரணிகள் சந்தித் வேளையில், நீதியமைச்சின் நடவடிக்கைகளுக்காக போதிய வசதியின்மையால் ஹல்ஸ்டொப்பில் புதிய கட்டிட நிர்மாணம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment