Sunday, February 05, 2012இலங்கை::புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகல போர் குற்றங்களும் தனக்கு தெரியும் எனவும் அவற்றை தான் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளின் இந்த போர் குற்றங்களுடன் தொடர்புடைய தலைவர்கள் பல நாடுகளில் உள்ளனர். எனினும் எந்த நாடுகளும் அவர்களை கைதுசெய்வதில்லை.
சம்பந்தன் போன்றவர்கள் யார் என்பது பற்றி அறியாதவன் அல்ல. அவர்கள் புலிககளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். ஆனால் தற்போது எதுவும் தெரியாதவர்கள் போன் செயற்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் முழு தமிழ் மக்களின் யோசனைகள் அல்ல.அவை தமிழ் மக்களுக்கு தேவையானவை அல்ல. மிகவும் கெட்ட அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment