Monday, February 13, 2012

பிளவுகளுக்கு மத்தியிலேயே தீய செயல்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன - மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை!

Monday, February 13, 2012
இலங்கை::அநேகமானவர்கள் விரக்தியுடன் செயற்படுவதற்கு அவர்களின் அகத்திலுள்ள பிளவுகளே காரணம் என பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.

மொறட்டுவ முகத்துவாரம் ஜீஸேவாஸ் தேவாலயத்தின் வெள்ளிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, பேராயர் இதனைக் குறிப்பிட்டார்.

பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

அனைத்து விரக்திகளுக்கும்,மக்களின் உள்ளத்திலுள்ள பிளவுகளே அநேகமான சந்தர்ப்பங்களில் காரணமாக அமைவதாகவும், அந்தப் பிளவுகளின் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பேராயர் இதன்போது கூறினார்.

அனைவரும் நல்லதை செய்யவே விரும்புவதாகவும், எவ்வளவு நல்லதை செய்ய முயற்சித்தாலும் இறுதியில் தீயதை நோக்கியே ஈர்த்துச் செல்லப்படுவதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டார்.

பிளவுகளுக்கு மத்தியிலேயே தீய செயல்கள் அனைத்தும் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அவர் அதன் வினளவாக சுய கட்டுப்பாடு இல்லாது போவதாக சுட்டிக்காட்டினார்.

சட்ட விதிகளும் கட்டளைகளும் பிறப்பிக்கப்படுவதால் மாத்திரம் ஒழுக்கம் ஏற்படாது எனவும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் முதலில் தனி மனித ஒழுக்கம் ஏற்படவேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment