Sunday, February 12, 2012இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மதுவரி திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பி;ல் அவர், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் மது போத்தல் ஒன்றுக்காக தமது 20 ரூபா தரப்பட வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரகாந்தன் கோரி வருவதாக சுசாதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனை தாம் ஏற்றுக்கொள்ளமை காரணமாக கடந்த ஜனவரி 26 ஆம் திகதியில் இருந்து திருகோணமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுசாதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சுசாதரனின் இடமாற்றத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை ரத்துச்செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment