Thursday, February 9, 2012

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையால் எந்த பலனுமில்லை-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்!

Thursday, February 09, 2012
திருப்பூர்::கச்சத்தீவை மீட்பதால் தமிழக மீனவர்களுக்கு எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். திருப்பூரில் நிருபர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை என்ற போதிலும், கச்சத்தீவை மீட்பதால் தமிழக மீனவர்களுக்கு எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்!

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதால் எந்த பலனும் இல்லை. கச்சத்தீவை சுற்றி மீன்வளம் இல்லை. இருப்பினும் இலங்கைக்கு அருகில் இருந்த தீவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி அந்தத் தீவை இலங்கைக்குக் கொடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment