Pages

Saturday, February 4, 2012

மேற்குலக நாடுகளுடான உறவுகளை இலங்கை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் -ரொஹான் குணரட்ன!

Saturday, February 04, 2012
இலங்கை::மேற்குலக நாடுகளுடனான உறவுகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்னதெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுப்பதற்கு இந்தியாவுடனான உறவு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசாங்கத்துடனான உறவுகளை முறித்துக் கொள்வது புத்திசாதூரியமானதீர்மானமாக கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கக் கூடிய ஆற்றல்தமிழக அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் இலங்கைஅரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment