Pages

Saturday, February 4, 2012

தேசிய சுதந்திர தின விழா கல்முனை:-64வது சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பில் கைதிகள் விடுதலை!


Saturday, February 04, 2012
இலங்கை:: தேசிய சுதந்திர தின விழா கல்முனை:-64வது சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பில் கைதிகள் விடுதலை!

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் 64 வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது...

64வது சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பில் கைதிகள் விடுதலை!

64வது சுதந்திர தினத்தை யொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 21 கைதிகள் இன்று (4.2.2012) விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுகுற்றங்கள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை அனுபவித்து வந்த கைதிகளும் மற்றும் சிறிய குற்றங்கள் தொடர்பில் அபராதம் செலுத்த தவறிய கைதிகளுமே இவ்வாறு பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் எஸ்.கஜநாயக்க, சிறைச்சாலை பிரதான நலன்புரி அதிகாரி எஸ்சிறினிவாசன், நலன்புரி அதிகாரி ஏ.முபாறக் உட்பட சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று இக்கைதிகள் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment