Sunday, February 05, 2012இலங்கை::இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இலங்கோவன் தெரிவித்தார்.
யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது, வடமாகாணத்தின் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இக்குழுவினருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய வடாமகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி,
"வடக்கின் வசந்தம்' அபிவிருத்தியில் வட மாகாணம் துரிதகதியில் அபிவிருத்தியடைந்து வருகிறது.
கடந்த 30 வருடகாலத்திற்குப் பின்பு நீங்கள் யாழ்.மண்ணில் கால்வைக்கக் கூடிய வசதியை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். வடமாகாணம் என்றுமில்லாதவாறு அபிவிருத்தியை நோக்கிய பாதையில் சென்றுகொண்டு இருகிறது.
மக்களின் அமைதியான வாழ்வுக்கு அபிவிருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது" என குறிப்பிட்டார்.
இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது, யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோ, வடாமாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் திருமதி விஜயலச்சுமி ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment