Wednesday,February,08,2012லக்னோ::உத்தரபிரதேசத்தில் முதல்கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட 55 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாயின. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ.பி.யில் மொத்தம் உமுள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 8 தொடங்கி மார்ச் 3 வரை 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் இன்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்சபாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய, மாநில போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றைய தேர்தலில் அமைச்சர்கள் லால்ஜி வர்மா, சங்கிராம்சிங் வர்மா, 15 முன்னாள் அமைச்சர்கள், 31 எம்எல்ஏக்கள் உள்பட 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களது தலைவிதியை சுமார் 1.7 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர். தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 13 ஆயிரத்து 186 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment