Friday, February 10, 2012ராமேசுவரம்::ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 600 விசைப்படகுகள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு 3 போர் கப்பல்களில் ரோந்துவந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர்..
மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜான் பிரிட்டோ , ராபர்ட் , பெட்வின் , மரியகிளாசன் ஆகிய 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர், மீனவர்களை இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment