Pages

Friday, February 3, 2012

திமுகவில் 'ஜனநாயக நடைமுறை' வலுவடைகிறது-ஒரு பதவியில் இனி 3 ஆண்டு மட்டுமே நீடிக்க முடியும்!

Friday, February 03, 2012
சென்னை::திமுகவில் ஜனநாயக நடைமுறையை மேலும் வலுப்படுத்த கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இனிமேல் ஒருவர் ஒரு பதவியை நிரந்தரமாக வகிக்க முடியாதாம். மாறாக 3 ஆண்டுகள் வரை மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியுமாம்.

இது உள்ளிட்ட மேலும் பல முக்கியத் தீர்மானங்கள் இன்று நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ளதாம்.

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து நேற்று நடைபெற்ற உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கட்சியின் பல்வேறு சீர்திருத்தங்கள், கனிமொழி, மு.க.ஸ்டாலினுக்கு பதவி தருவது, பதவியை உயர்த்துவது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

இதில் முக்கிய அம்சமாக, மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு பதவியை வகிக்கக் கூடாது என்றும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர் அணி பொறுப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

மாலை 4 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முடிவடையும். அதன் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பார்.

No comments:

Post a Comment