Pages

Wednesday, February 8, 2012

யாழ்.திருநெல்வேலி சந்தைப்பகுதியில் இன்று காலை இளைஞர்கள் மீது வாள்வெட்டு இருவர் காயம்: 2பேர் கைது!

Wednesday,February,08,2012
இலங்கை::யாழ்.திருநெல்வேலி சந்தைப்பகுதியில் இன்று காலை இளைஞர்கள் மீது வாள்வெட்டு இருவர் காயம்: 2பேர் கைது:-

யாழ்.திருநெல்வேலி சந்தைப்பகுதியில் இன்று காலை இளைஞர்கள் மீது வாளினால் வெட்டிக் காயப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் சமாரியாக சந்தைப்பகுதியில் நின்ற இரு இளைஞர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவ்விரு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாளால் இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்திய இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாலம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி!

ஹெட்டிபொல பகுதியிலுள்ள பாலமொன்று உடைந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போதுள்ள பாலத்திற்குப் பதிலாக புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு நேற்று மாலை சில வெடிப்புச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவங்களை மேற்கொள்வதற்காக பாலத்தினை சோதனையிடுவதற்கு மூவர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பழைய பாலம் உடைந்து வீழ்ந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தின் போது உயிரிழந்துள்ளார்.

தங்க முலாம் பூசப்பட்ட உலோகக் குண்டுகளை வைத்திருந்தவர் கைது!

சட்டவிரோதமாக ஒரு தொகை தங்க முலாம் பூசப்பட்ட உலோகக் குண்டுகளை வைத்திருந்த ஒருவர் அரலகங்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 284 கிராம் எடையுடைய 180 உலோக குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அரலகங்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment