Pages

Friday, February 3, 2012

2 ஜி விவகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: முதல்வர் ஜெயலலிதா!

Friday, February 03, 2012
சென்னை::2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பை வரவேற் கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து? உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்; சிறப்பு நீதிமன்றத்தில் என்ன நடக்கவுள்ளது என்பதை அறிய அவலாக உள்ளேன்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளதே? சிதம்பரத்துக்கு ஆதரவாக மத்திய அரசு என்னதான் சொன்னாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.அமைச்சர் பதவியில் இருந்து சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்துவீர்களா? இந்த நேரத்தில் இதற்கு மேல் சொல்ல விரும்ப வில்லை.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

பஸ் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் :முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு!

சென்னை::தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது: பட்டுக்கோட்டை தொகுதி ரங்கராஜன் (காங்.): கவர்னர் உரையில் நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

முதல்வர் ஜெயலலிதா: நாங்களும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிடம் நிறைய எதிர்பார்த்தோம். எதிர்பார்த்து எதிர்பார்த்து, கோரிக்கை வைத்து கோரிக்கை வைத்து மிஞ்சியது வெறும் ஏமாற்றம்தான். ரங்கராஜன்: தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் கிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். சத்துணவில் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை இளநீர் கொடுக்க வேண்டும். இதனால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். மின் கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி வருகிறது.

அமைச்சரும் விளக்கமாக பதில் சொன்னார். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். கூடங்குளத்தில் சிலர் தங்களது சுயநலத்துக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க முடியும். இதன்மூலம் தமிழகத்தில் ஏற்படும் மின் பிரச்னையை சமாளிக்கலாம். பஸ் கட்டணம் உயர்வு ‘லாங்க் ஜம்ப்’ அடித்தது போல் உயர்த்தப்பட்டிருக்கிறது. சிறிது சிறிதாக ஏற்றி இருக்கலாம்.

முதல்வர்: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் டீசல் கட்டண உயர்வை ‘சாட் ஜம்ப்’ போன்று அடிக்கடி உயர்த்தியதால் நாங்கள் ‘லாங்க் ஜம்ப்’ போன்று பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டோம். சரத்குமார்(சமக): அதிமுக தனித்து நின்றிருந்தாலும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும். காவல் துறை சீர் குலைந்துவிட்டதாக இங்கு சிலர் சொல்கிறார்கள். மக்களின் பழக்கவழக்கங்கள் மாறி இருப்பதால் கொலைகள் நடக்கிறது. ரவுடி கொலை என்பது வேறு, குடும்ப கொலை என்பது வேறு. ஆனால் காவல் துறை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தருகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

No comments:

Post a Comment