Pages

Monday, February 6, 2012

நாடு திரும்பிய 28 இலங்கையர்கள்!

Monday, February 06, 2012
இலங்கை::சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சித்த போது, மேற்கிந்திய தீவுகளின் டுபாகோ பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 28 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் 60 பேர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக சர்வதேச அகதிகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த 60 பேரும் நாடு திரும்பும் தினம் தொடர்பில் உறுதியாக கூற முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இலங்கையர்கள், ஆட் கடத்தற்காரர்களின் உதவியுடன் கனடாவுக்குச் செல்ல முயற்சித்த வேளையில், ஆபிரிக்காவின் டுபாகோ பகுதியில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment