Saturday, February 11, 2012இலங்கை::சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.6 பில்லியன் டொலர் கடனின் கடைசிக் கொடுப்பனவான 800 மில்லியன் ரூபாவை இலங்கை பெற்றுக்கொள்ளாது என இலங்கை மத்திய வங்கி முன்னர் தெரிவித்திருந்தபோதிலும் இத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான கடிதமொன்றை அடுத்தமாதம் அனுப்புவதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் நேற்று தெரிவித்தது.
சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக ஒத்துழைப்பின்றி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாரட் கப்ரால் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கு அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாக கலாநிதி அமுனுகம தெரிவித்தார்.
முழுமையான கடனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையிலிருந்து அரசாங்கம் முற்றாக விலகவில்லை. எஞ்சிய தொகையை நாம் பெறுவதென்றால்இ அத்த மாதம் நாம் தனியான கடிதமொன்றில் கையெழுத்திட வேண்டியிருக்கும் என அவர் கூறினார். வெளிநாட்டு நாணய கையிருப்பு அடிப்படையில் இதுதொடர்பாக அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான 2.6 பில்லியன் டொலர் கடனை சர்வதேச நாணய நிதியத்தின் 24.06.2009 ஆம் திகதி அங்கீகரித்தது. இவற்றில் 1.8 பில்லியன் டொலரை 7 கட்டங்களில் இலங்கை ஏற்கெனவே பெற்றுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment