Tuesday, February 07, 2012இலங்கை::இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் இவர்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தெய்வேந்திரமுனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது.
No comments:
Post a Comment