Pages

Monday, February 6, 2012

13ம் திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பது அரசியல் சாசன மீறலாகும் -டிலான் பெரேரா!

Monday, February 06, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பதானது அரசியல் சாசனத்தைமீறும்; நடவடிக்கையாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலம் நாட்டின் அடிப்படைச் சட்டங்களில்ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல விடயங்களையும் எதிர்க்கும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என அவர்வலியுறுத்தியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதுஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலம் நாட்டின் அரசியல் சாசனத்தின் ஓர் அங்கம்எனவும் அதனை எதிர்ப்புது அர்த்தமற்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களைபிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த சதித்திட்டங்களை முறியடிக்கமுடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment