Pages

Sunday, February 5, 2012

பிப்ரவரி 13ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெயலலிதா!

Sunday, February 05, 2012
சென்னை::முதல்வர் ஜெயலலிதா தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி செல்கிறார். அங்கு நடைபெறும் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 3வது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தன்னை தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தொகுதி முழுவதும் கடந்த ஜூன் மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அத்துடன் 19.6.2011 அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பக்தர்களுக்கான தங்கம் பகுதி, புதிய துணை மின் நிலையங்கள், புதிய மகளிர் தோட்டக்கலைக்கல்லூரி உள்பட 190 கோடிக்கும் மேலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ஏழை எளிய மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் சட்டமன்றம் தொகுதியில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், ஏழை எளிய மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் 13.2.2012 அன்று ஸ்ரீரங்கம் சென்று அங்கு நடைபெறவிருக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment