Pages

Sunday, February 5, 2012

13ம் திருத்தச் சட்டமோ 13 பிளஸோ வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது – திவயின!

Sunday, February 05, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்டமோ 13 பிளஸோ வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது – திவயினவின் ஆய்வு கூறுகிறது:-

13ம் திருத்தச் சட்டமோ அல்லது அதற்கு அப்பாலான 13 பிளஸோ, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும் தெரிவித்துள்ளதாக திவயின கூறுகிறது.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடன் வாழக் கூடிய நல்லாட்சியை நிறுவுவதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறீ ஜயர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெல்லன்வில விமலரதன தேரர் 13ம் திருத்தச் சட்டமோ அல்லது அதற்கு அப்பாலான 13 பிளஸோ வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என வலியுறுத்தி உள்ளார்.

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கும் அவர் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றல், கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பலவந்தமாக திணிக்கப்படும் தீர்வுத் திட்டங்கள் பலனளிக்கப் பொவதில்லை என தெரிவித்துள்ளதோடு தமிழ் முஸ்லிம் மக்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக கருதப்படக் கூடாது எனவும், அவர்களும் சிங்கவளர்களைப் போன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பெல்லன்வில விமலரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஸ்ட சட்த்தரணி எஸ்.எல் குணசேகர இது பற்றிக் குறிப்பிடுகையில் புதிதாக சட்டங்களை உருவாக்கியோ அல்லது இருக்கும் சட்டங்களை அமுல்படுத்தியோ வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment