Pages

Wednesday, January 4, 2012

செல்போனில் ரயில் டிக்கெட்: ஐஆர்சிடிசி புதிய வெப்சைட்!

Wednesday,January,04,2012
புதுடெல்லி : செல்போனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துணை நிறுவனமான ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
http://www.irctc.co.in/mobile என்ற செல்போனுக்கான தனி இணைய தளத்தில் ஐஆர்சிடிசி சேவைகளை பெறலாம். பயன்படுத்த எளிமையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இணைய தள பிரசர் வசதி கொண்ட செல்போனில் இருந்து இந்த சேவையை பெறலாம். அடிப்படை ஜிபிஆர்எஸ் சேவை இருந்தால் போதும். ஒரு சில ‘கிளிக்’ செய்து ரயில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

அத்துடன் முன்பதிவு விவரம், ரத்து செய்த விவரம் ஆகியவற்றையும் காணலாம். கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஐஆர்சிடிசி இணைய தளத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அதே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செல்போனுக்கான இணைய தளத்திலும் பயன்படுத்த முடியும். இதற்கென தனியாக உறுப்பினராக தேவையில்லை. பேமேட், என்ஜிபே, ஆட்டாம் என ஏற்கனவே 3 அப்ளிகேஷன்கள் வழியாக செல்போனில் ரயில் டிக்கெட் முன்பதிவு இருக்கும் நிலையில், ஐஆர்சிடிசியின் இந்த சேவை 4வதாக வந்துள்ளது.

No comments:

Post a Comment