Thursday,January 05, 2012புதுடெல்லி::பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும் பல முக்கிய பாதுகாப்பு காரணிகள் காணப்படுகின்றன.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவதற்கும், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் இந்தியா தொடர்ச்சியக உதவிகளை வழங்கி வருகின்றது.
உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் நான் எதிர்வரும் 16ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
சீனாவுடன் இலங்கை பேணி வரும் தொடர்புகள் குறித்து அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.
ஏனைய உலக நாடுகளுடன் இலங்கை பேணி வரும் உறவுகளுக்கு மதிப்பளிக்கின்றோம்.
நன்மதிப்பின் அடிப்படையில் உறவுகளை தொடர்வதற்கே இந்தியா விரும்புகின்றது என வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment