Pages

Tuesday, January 3, 2012

இலங்கையை சூழவுள்ள இந்து சமுத்திரத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தையும் சீனா கையகப்படுத்த உள்ளது!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::இலங்கையை சூழவுள்ள இந்து சமுத்திரத்தில் 14 ஆம் நூற்றாண்டில் பாராக்கிரமபாகு மன்னன் காலத்தல் காணாமல் போனதாக கூறப்படும் 300 கப்பல்கள் சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா அரசாங்கம், இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது.

இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக சீனாவின் உயர் அதிகாரிகள், இலங்கை தொல்பொருள் ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வுகளின் போது, தொல் பொருள்கள் கிடைத்தால், இரண்டு தரப்பும் பகிர்ந்து கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணிகளுக்காக இலங்கை வரும் நிபுணர்களுக்கு, இலங்கையில் வதிவிட வசதிகளை வழங்க வேண்டும் எனவும் சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment