Pages

Thursday, January 5, 2012

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழு தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது!

Thursday,January 05, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழு தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இக்குழு தென்னாபிரிக்காவின் தலைநகரான டர்பனுக்கு சென்றுள்ளது.தென்னாபிரிக்காவில் ஆளும் கட்சியான தென்னாபிரிக்க காங்கிரஸின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று இத் தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.

இக்குழுவில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி அளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இக்குழுவினர் அந்த விஜயத்திற்குப் பின்னர் தென்னாபிரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment