Tuesday, January 3, 2012

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்படும்-கெஹலிய ரம்புக்வெல்ல!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்த நவவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்தரைகளை அமுல்படுத்துவது குறித்து சகல அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள உள்ளதாக ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காத்திரமான முறையில் அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட சகல மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பரிந்தரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஓரு வார காலமே முடிந்துள்ளதாகவும், சிலர் பரிந்துரைகளை துரித நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சகல பரிந்துரைகளையும் ஒன்றுவிடாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களே மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

காவற்துறை-காணி அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கத்துக்கு கொள்கையளவில் பெரிய சிக்கல்-கெஹெலிய ரம்புக்வெல்ல

அரசியல் தீர்வு செயற்பாட்டில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கத்துக்கு கொள்கையளவில் மிகப்பெரிய சிக்கல் காணப்படுகின்றது.ஆனாலும், காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களின் சில எல்லைகள் மற்றும் வரையறைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுநடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஊடகத் துறை அமைச்ரும் அமைச்ரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த விடயத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவேண்டும். காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்காவிடின் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என கூறி விலகிச் செல்வதால் ஏற்படப்போவது ஒன்றுமில்லை. குறித்த அதிகாரங்களின் சில விடயங்கள் குறித்து பேச அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளன எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

காணி அதிகாரங்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார் என அரசாங்க பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெவித்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அமைச்சர் ரம்புக்வெல்ல இதனை குறிப்பிடுள்ளார்.

எந்தவொரு விடயமானாலும் அல்லது சிக்கலானாலும் முதலில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் அதில் ஏதோவொரு இணக்கப்பாட்டை எட்ட முடியும். இதனை அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திவருகின்றது.

அதனைவிடுத்து ஒரு காரணத்தை முன்னிறுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாகவும் திடீரென அறிவிப்பதில் அர்த்தம் இல்லை.

குறிப்பாக காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை அரசியல் தீர்வுக்கு உள்ளடக்க முடியாது என்பதில் அரசாங்கம் கொள்கையளவில் உறுதியான தீர்மானத்தில் உள்ளது. அதில் விட்டுக்கொடுப்புக்கள் என்பது மிகவும் கடினமான விடயமாகும்.

காரணம் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கம் ஆழமாக ஆராயவேண்டிய வகையில் பிரச்சினைகளும் சிக்கல்களும் உள்ளன. அதனால்தான் அரசாங்கம் என்ற வகையில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது என தெளிவுபடுத்திவருகின்றோம். எங்களுக்கு அந்த விடயங்களில் சிக்கல்கள் இருக்கின்றன என கூறுவதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

No comments:

Post a Comment