Wednesday, January 4, 2012

புயல் பாதித்த கடலூரில் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஜெ. ஆய்வு- காரில் சென்று கருணாநிதி பார்வை!

Wednesday,January,04,2012
சென்னை:தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி கார் மூலம் கடலூர் சென்று புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்க்கிறார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் கடலூர் செல்கிறார். அங்கு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை முதலில் சந்திக்கிறார். நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்கிறார். பின்னர் சேதப் பகுதிகளை பார்வையிடுகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,புயலால் பாதிக்கப்பட்ட, கடலூர் மாவட்டத்துக்கு, 4ம் தேதி நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன். இதை தொடர்ந்து, அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்திலேயே தங்கியிருந்து, நிவாரண உதவிகளை வழங்குவர் என்று கூறியுள்ளார்.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் சேத பாதிப்பை ஹெலிகாப்டரில் இருந்தபடி முதல்வர் பார்வையிடுகிறார்.

இதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் புயல் சேதத்தை இன்று பார்வையிடுகிறார்.

No comments:

Post a Comment