Wednesday,January,04,2012இலங்கை::சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பதற்கான பரீட்சார்த்த திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், நீதி அமைச்சு, சட்ட மருத்துவ திணைக்களம் ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் சமூகத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு முன்வருமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment