Pages

Thursday, January 5, 2012

தங்காலை கொலைச் சம்பவம்: உயிரிழந்தவரின் சகோதரர் இலங்கை விஜயம்!

Thursday,January 05, 2012
இலங்கை::தங்காலை மெடில்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜையான குராம் ஷயீக்கின் பூதவுடல் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்ள உயிரிழந்தவரின் சகோதரரான நஸீர் ஷயீக் நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த அவர் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் நிலமை குறித்துக் கேட்டறிந்துகொண்ட அவர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் விரைவில் நிறைவுபெறும் என தானும் தனது குடும்பத்தினரும் நம்புவதாக உயிரிழந்த பிரித்தானிய பிரஜையின் சகோதரர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment