Pages

Tuesday, January 31, 2012

மெகசின் சிறை மோதல் சம்பவம்; அறிக்கை தயார்!

Tuesday, January 31, 2012
இலங்கை::கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்டமோதல் தொடர்பான விசாரணை அறிக்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம், இன்றையய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை நாளைய தினம் தமக்கு கிடைக்குமென அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் அடங்கிய குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டது

இந்த விசாரணைகளில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கையின் ஊடாக வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment